அதிகரித்து வரும் உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் உலகம் முழுவதும் கூடுதலாக 40 விழுக்காடு மக்கள் உணவுப் பற்றாக்குறைக்கு ஆளாகி இருப்பதாக ஐநா தகவல்
அதிகரித்து வரும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் உலகம் முழுவதும் கூடுதலாக 40 விழுக்காடு மக்கள் உணவுப் பற்றாக்குறைக்கு ஆளாகி இருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது.
ஐநாவின் உலக உணவுத் திட்டத்தின் அறிக்கையில், மக்களுக்கு இடையேயான மோதல், காலநிலை மாற்றம் மற்றும் கொரோனா தொற்று காரணமாக உணவுப்பற்றாக்குறையால் 27 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இவை தவிர சர்வதேச சந்தையில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலை கிட்டத்தட்ட 34 விழுக்காடு உயர்ந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லெபனான் நாட்டில் கோதுமை மாவின் விலை 219 மடங்கும், சமையல் எண்ணையின் விலை 440 மடங்கும் உயர்ந்திருப்பதையும் ஐநா அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
Comments