இந்திய அரசின் 20 சொத்துகளை முடக்க பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவு.
கெயர்ன் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய வரி நிலுவைத்தொகைக்கு ஈடாக பாரீஸில் உள்ள இந்திய அரசின் 20 சொத்துகளை முடக்க பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்தேதியிட்டு வரி வசூலித்த விவகாரத்தில் இந்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைக்கு 170 கோடி டாலர் இழப்பீடு கோரி நடைபெற்ற வழக்கில் 120 கோடி டாலர் இழப்பீடு வழங்கும்படி பிரான்ஸில் உள்ள சர்வதேச தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இதையடுத்து பாரீசில் உள்ள இந்திய அரசின் 20 சொத்துகளை முடக்க பிரான்ஸ் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் பிரான்சில் உள்ள ஏர் இந்தியா அலுவலகங்கள் உள்ளிட்ட சொத்துகள் முடக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக எந்த நோட்டீசும் பிரான்ஸ் நீதிமன்றத்தில் இருந்து வரவில்லை என்று தெரிவித்துள்ள நிதியமைச்சகம், இந்த விவகாரத்தில் சுமுகத்தீர்வு காண்பதற்கு தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
Comments