நடப்பாண்டில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு 520 மில்லியன் கோவாக்சின் தடுப்பூசி வழங்க இலக்கு

0 3542

நடப்பாண்டு இறுதிக்குள் ஆப்பிரிக்க நாடுகளுக்கு 520 மில்லியன் தடுப்பூசிகளை வழங்க இலக்கு நிர்ணயித்து உள்ளதாக கோவாக்சின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே 25 மில்லியன் தடுப்பூசிகள் 44 ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழங்கப்பட்டு உள்ளதாகவும், அதனால் உயிரிழப்பு எண்ணிக்கை கட்டுக்குள் வராது என்றும் கோவாக்சின் நிறுவனம் தரப்பில் தெரிவித்துள்ளது.

நடப்பாண்டில் 720 மில்லியன் தடுப்பூசிகள் வழங்க திட்டமிட்டு இருந்த நிலையில் இந்தியாவில் ஏற்பட்ட அபரிமிதமான சூழல் காரணமாக சீரம் நிறுவனத்தில் தயாராகும் தடுப்பு மருந்துகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தாகவும், நிலைமை சீரானதும் மத்திய அரசு மற்றும் சீரம் நிறுவனத்துடன் கலந்து ஆலோசித்து மீண்டும் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலுக்கு மத்தியில் ஆப்பிரிக்க நாடுகளில் வெறும் 1 புள்ளி 2 சதவீத மக்களுக்கு மட்டும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாகவும், செனகல், கானா நாடுகளில் மக்களின் நிலை பரிதவிப்புக்குள்ளாக இருப்பதாகவும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.    

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments