கொரோனா பாதிப்பு இன்னும் முற்றிலுமாக நீங்கவில்லை: புதிய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
கொரோனா இன்னும் முற்றிலுமாக ஒழியவில்லை என்பதால் சிறிய கவனக்குறைவும் இல்லாமல் விரைவாகப் பணிகளை நிறைவேற்றுமாறு புதிய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு 43 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். இதையடுத்து நேற்று மாலை முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய பிரதமர் மோடி, புதிய அமைச்சர்கள் ராஜினாமா மூத்த அமைச்சர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தினார். அவர்கள் நீக்கம் காலத்தின் அவசியம் என்பதால்தான் தவிர எந்த வகையிலும் அவர்கள் தகுதிக்குறைவானவர்கள் அல்ல என்றும் மோடி கூறினார்.
கொரோனா தடுப்புப் பணிகளில் துரிதமாக செயல்படும்படி அமைச்சர்களை மோடி கேட்டுக் கொண்டார். பொதுமக்கள் பெரும் திரளாகக் கூடுவது அச்சத்தை ஏற்படுத்துகிறது என்றும் முகக்கவசம் இல்லாமல் பலர் நடமாடுவதாகவும் மோடி கவலை தெரிவித்தார். கொரோனா முற்றிலுமாக ஒழிந்துவிடவில்லை என்றும் அவர் எச்சரித்தார்.மகாராஷ்ட்ரா ,கேரளா போன்ற மாநிலங்களின் நிலவரம் கவலையளிப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
மக்கள் நல்வாழ்வுக்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசின் நலத் திட்டங்கள் மக்களிடம் போய் சேருவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
Comments