வீட்டுக்கே வரும் நடமாடும் பியூட்டி பார்லர் ; இளம்பெண்கள் வரவேற்பு

0 3352
வீட்டுக்கே வரும் நடமாடும் பியூட்டி பார்லர் ; இளம்பெண்கள் வரவேற்பு

ஒவ்வொரு நாளும் களத்திற்கு வரும் வெவ்வேறு விதமான வியாபார யுக்திகளுக்கு மத்தியில் பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில், நடமாடும் பியூட்டி பார்லர் என்ற நூதன வாகனம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

ஒப்பனைக் கலைஞர் Sahar Ahmad என்பவர் அறிமுகம் செய்துள்ள 'Glitter' என்ற பிங் மற்றும் கருப்பு நிற மினி பேருந்து, வீட்டு வாசல் வரை தேடி வந்து, அழகு சேவையை செய்து வருகிறது. Nablus நகரில் வலம் வரும் இந்த நடமாடும் பியூட்டி பார்லருக்கு இளம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மேலும் பல மினி பேருந்துகளை இவ்வாறு நடமாடும் பியூட்டி பார்லர்களாக மாற்றி, இளம் பெண் களுக்கு உதவும் வகையில், பல்வேறு பகுதிகளிலும் உலவ விட, இந்த ஒப்பனைக் கலைஞர் திட்டமிட்டு உள்ளார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments