கனடா, ஜெர்மனி, மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு அடுத்த வாரம் முதல் இந்தியர்கள் பயணம் செய்ய அனுமதி..!

0 3344
கனடா, ஜெர்மனி, மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு அடுத்த வாரம் முதல் இந்தியர்கள் பயணம் செய்ய அனுமதி..!

டுத்த வாரம் முதல் கனடா, ஜெர்மனி, மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு இந்தியர்கள் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கனடாவில், பயணத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். கோவிஷீல்டின் 2 டோசுகளையும் போட்டிருக்க வேண்டும். கோவேக்சின் மற்றும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகளுக்கு கனடா இதுவரை அனுமதி வழங்கவில்லை என்பதை நினைவில் கொள்ளவும்.

ஜெர்மனியை பொறுத்தவரை தடுப்பூசியின் 2 டோசுகளையும் போட்டவர்கள் அல்லது தொற்றில் இருந்து குணமானதற்கு ஆதாரம் வைத்திருப்பவர்கள் அங்கு குவாரன்டைனில் இருக்க தேவையில்லை.

மாலத்தீவுக்கு பயணத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட RT-PCR நெகடிவ் சான்றிதழை கொண்டு செல்ல வேண்டும் மாலத்தீவு இமிக்ரேஷன் இணைய தளத்தில் சுகாதார டிக்ளரேஷன் பாரத்தையும் தாக்கல் செய்ய வேண்டும்.

மாலத்தீவுக்கு சென்றவுடன் குவாரன்டைனோ, கொரோனா சோதனையோ மேற்கொள்ளவேண்டியதில்லை. மாலத்தீவுகளுக்கான விமான சேவை வரும் 15 ஆம் தேதி துவங்குகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments