உள்நாட்டில் கச்சா எண்ணெய், எரிவாயு உற்பத்தியை அதிகரிக்கக் கவனம் செலுத்தப்படும் -அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி
உள்நாட்டில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உற்பத்தியை அதிகரிப்பதில் கவனம் செலுத்தப்படும் எனப் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
தனது அமைச்சகத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியப் பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலராக உயர்த்துவதில் எரியாற்றல் வளங்களும், அவற்றின் நுகர்வும் தலையாய இடத்தைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.
2030ஆம் ஆண்டுக்குள் நாட்டின் முதன்மையான ஆற்றல் வளங்களில் இயற்கை எரிவாயுவின் பங்கை 15 விழுக்காடாக அதிகரிக்கும் வகையில் செயல்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
நாட்டின் எண்ணெய், எரிவாயுத் தேவையில் 77 விழுக்காடு இறக்குமதியைச் சார்ந்தே உள்ளதாகவும், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் 2022 ஆகஸ்டுக்குள் இதை 10 விழுக்காடு குறைக்க வேண்டும் என உலக எரியாற்றல் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியது குறிப்பிடத் தக்கது.
Comments