கங்கை நீரில் கொரோனா வைரசின் தடயங்கள் காணப்படவில்லை :ஆய்வில் தகவல்
கங்கை நதியில் கொரோனா வைரசின் எந்த தடயங்களும் இருப்பதாக கண்டுபிடிக்கப்படவில்லை என அது குறித்த ஆய்வை நடத்திய அரசு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
உத்தர பிரதேசம் மற்றும் பீகாரின் சில மாவட்டங்களை ஒட்டி, கங்கை நதியில், கொரோனாவால் இறந்தவர்கள் என கருதப்படுபவர்களின் சடலங்கள் மிதந்து வந்தன. அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சடலங்களால், கங்கை நீரிலும் கொரோனா பரவியதா என ஆய்வு நடத்த அரசு உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில், தேசிய கங்கை தூய்மை திட்ட இயக்கம், சிஎஸ்ஐஆர், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் சேர்ந்து ஆய்வு நடத்தின.கங்கை நீரில் உள்ள வைரசுகளின் ஆர்என்ஏ பிரித்து எடுக்கப்பட்டு அவை RT-PCR சோதனை செய்யப்பட்டு, கொரோனா இல்லை என முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர்.
Comments