போட்ஸ்வானாவில் மீண்டும் ஒரு மிகப்பெரிய வைரக்கல் கண்டுபிடிப்பு..!
ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் மீண்டும் ஒரு மிகப்பெரிய வைரக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜ்வெனெங் சுரங்கத்தில் சுமார் ஆயிரத்து 98 காரட் எடை கொண்ட வைரம் கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தற்போது கபோரோன் (Gaborone) நகரில் உள்ளங்கை அளவுடைய வைரக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆயிரத்து 174 காரட் எடைக்கொண்ட இந்த வைரக்கல், மிகப்பெரிதாகவும், வெள்ளை நிறத்திலும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் 1905 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட 3,106 காரட் எடை கொண்ட வைரக்கல்லே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகப்பெரிய வைரக்கல்லாக உள்ளது.
Comments