பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களை குறிவைக்கும் சீன ஹேக்கிங் கும்பல்
பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர்களின் கணக்கில் உள்ள பணத்தை சீனாவைச் சேர்ந்த ஹேக்கிங் கும்பல் ஒன்று குறிவைத்திருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
KYC எனப்படும் வாடிக்கையாளர் விவரங்களை அப்டேட் செய்யும்படி வங்கியின் சார்பில் வாட்ஸ்அப் மூலமாக தொடர்பு கொண்டு தகவல்களைக் கேட்கும். இதற்கு வங்கியின் அதிகாரப்பூர்வ இணையத்தைப் பயன்படுத்தாமல் மூன்றாம் நபர் இணையத்தைப் பயன்படுத்துவது வழக்கம்.
வாடிக்கையாளர்கள் தகவல்களை பூர்த்தி செய்தததும் ஓடிபி எண் அனுப்பப்பட்டிருப்பதாகக் கூறி அதை கேட்டு அறிந்த பின் அது வங்கியில் இருக்கும் பணத்தை சுருட்டிவிடும்.
வாடிக்கையாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய் வரை இலவச பரிசுகள் வழங்குவதாக ஆசை காட்டி இந்த கும்பல் மோசடி செய்யத் திட்டமிட்டுள்ளதாக அண்மையில் டெல்லியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவித்துள்ளன. கோட்டாக், இன்டஸ் இன்ட் போன்ற சில வங்கிகளும் இதே போல் குறிவைக்கப்பட்டிருக்கலாம் என்றும் ஆய்வு நடத்திய அமைப்புகள் எச்சரித்துள்ளன.
Comments