"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
மத்திய நிதி அமைச்சகத்துடன் பொது நிறுவனங்கள் துறை இணைப்பு
மத்திய நிதி அமைச்சகத்துடன் பொது நிறுவனங்கள் துறை இணைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே மத்திய நிதி அமைச்சகத்தின் நேரடி கட்டுபாட்டில் பொருளாதார விவகாரங்கள், வருவாய் செலவீனம், முதலீடு மற்றும் பொது சொத்து நிர்வாகம், நிதி சேவைகள் என 5 துறைகள் உள்ளன.
இதில் 6-வதாக பொது நிறுவனங்கள் துறை இணைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து மாருதி, பெல் ஸ்கூட்டர்ஸ் இந்தியா உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களின் செயல்பாடுகள், முதலீடு, திட்டம், நிதி நிலவரம் உள்ளிட்ட நடிவடிக்கைகள் மத்திய நிதி அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பட்டுக்குள் வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நலிவுற்ற பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது, தனியார் மயமாக்குவது உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Comments