ஒரு பச்சைக்கிளி ரெண்டு முத்துச்சரம்… மூக்குடைந்த முகநூல் கிளி..! பிளாக் மெயிலர்ஸ் சிக்கினர்

0 3897
ஒரு பச்சைக்கிளி ரெண்டு முத்துச்சரம்… மூக்குடைந்த முகநூல் கிளி..! பிளாக் மெயிலர்ஸ் சிக்கினர்

கோயம்புத்தூரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர், பேஸ்புக் மூலம் திருமணமானவரை காதல் வலையில் வீழ்த்தி, ரிசார்ட்டுக்கு அழைத்துச்சென்று ஆண் நண்பர்களுடன் சேர்ந்து மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கோவை மாவட்டம், தடாகம் பகுதியை சேர்ந்த திருமணமான இளைஞருடன், பள்ளித்தோழி ஒருவர் முகநூலில் அறிமுகமாகியுள்ளார். 22 வயதான  அந்தப்பெண் முகநூலில் மயக்கும் விதமாக பேசி அவரை காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.

காதலில் மூழ்கிய இருவரும் முகநூலில் தங்களது அந்தரங்க புகைப்படங்களை பரிமாற்றம் செய்து, சாட்டிங்கில் காதல் மொழி பேசியும் வந்துள்ளனர் . அப்போது, இளைஞர் வசதியாக இருப்பதை தெரிந்து கொண்டு அவசர செலவுக்கு என்று 23,000 ரூபாயை பணத்தை அந்தப்பெண் பெற்றுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக அந்த இளம்பெண், இளைஞரை தனிமையில் சந்திப்பதற்காக ஆனைக்கட்டியில் உள்ள ஒரு ரிசார்ட்க்கு அழைத்து சென்றுள்ளார். ஏற்கனவே திருமணமாகி மனைவி இருக்கும் நிலையில், காதலியின் அழைப்பை ஏற்று உற்சாகமாக சென்ற அந்த இளைஞருக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ரிசார்ட்டின் படுக்கை அறைக்குள் நுழைந்த இளைஞர் அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததை செல்போனில் படம் எடுத்து வைத்துக் கொண்ட இரு இளைஞர்கள் அவரை மடக்கிப்பிடித்து கட்டியுள்ளனர். அந்த இருவருடன் சேர்ந்து இளம் பெண்ணும் முகநூல் காதலனை அடித்து உதைத்து அவனிடம் இருந்த பணத்தை பறித்துள்ளார்.

இருவரும் நெருக்கமாக இருக்கும் வீடியோவை காட்டி, மேலும் சில லட்சங்கள் கேட்டு மிரட்டிய அந்த கும்பல், பணம் வராவிட்டால் படத்தை சமூக வலைதளத்தில் பரப்பி விடுவோம் என்று கூறியுள்ளனர். இதனால் மிரண்டு போன அந்த இளைஞர் இரண்டு நாள் கழித்து பணம் கொடுப்பதாக கூறி வீடு திரும்பியுள்ளார்.

ரிசார்ட் அறையில் தனக்கு நடந்த கொடுமை குறித்தும், பிளாக் மெயில் குறித்தும் தடாகம் காவல் நிலையத்தில் அந்த இளைஞர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், பணம் பறித்த அந்தப் பெண்ணையும், அந்த பெண்ணின் கூட்டாளிகள் இருவரையும் பணம் தருவதாக கூறி அழைத்த காவல்துறையினர் அவர்களை சுற்றிவளைத்தனர்.

விசாரணையின் முடிவில் அந்த பெண்ணின் பெயரையும் பாதிக்கப்பட்ட முகநூல் காதலனின் பெயரையும் வெளியிட மறுத்த காவல்துறையினர் கூட்டாளிகளான 25 வயது அப்துல்கலாம் மற்றும் 23 வயதான ஆபீப் அலி ஆகிய இருவரின் பெயர்களுடன் அவர்களது புகைபடங்களையும் வெளியிட்டனர்.

3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

முகநூலில் பழகி பணம் கேட்டு மிரட்டும் பெண்கள் குறித்து அருகிலுள்ள காவல் நிலையத்திலும், 77081-00100, 94981-81212 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம் என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் வீட்டில் மனைவி இருக்கும் போது, முகநூலில் துணையை தேடும் மன்மதர்களுக்கு எந்த மாதியான வினை ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments