இமாச்சலப் பிரதேசத்தில் 6 முறை முதலமைச்சராக இருந்த வீரபத்ரசிங் காலமானார்.
இமாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் வீரபத்ர சிங் காலமானார்.
அவருக்கு வயது 87. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வீரபத்ர சிங் நீண்ட கால நோயின் காரணமாக இன்று அதிகாலை காலமானார்.கடந்த ஏப்ரல் 13ம் தேதி அவர் கோவிட் நோயின் பாதிப்பால் மோஹாலியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
ஒன்பது முறை எம்.எல்.ஏ.வாகவும் 5 முறை எம்பியாகவும் ஆறுமுறை முதலமைச்சராகவும் பதவிகள் வகித்தவர் வீரபத்ர சிங் .
Comments