இந்தியாவின் மின்தேவை இதுவரை இல்லா வகையில் நேற்று 1,97,060 மெகாவாட்டாக அதிகரிப்பு..!
இந்தியாவின் மின்தேவை இதுவரை இல்லா வகையில் செவ்வாயன்று 197 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளது.
நேற்று நாட்டின் மின்தேவை ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 60 மெகாவாட்டாக அதிகரித்துள்ளதாக மத்திய மின்சார அமைச்சகம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது. அதற்கு முந்தைய நாளில் ஒரு லட்சத்து 92ஆயிரத்து 160 மெகாவாட்டாக மின்தேவை இருந்தது.
விரைவில் மின்தேவை 2 லட்சம் மெகாவாட்டைத் தொடும் என மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார். பல மாநிலங்களில் பருவமழை தாமதத்தால் அதிக வெப்பநிலை நிலவுவதும், கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதும் மின் தேவை அதிகரிக்கக் காரணம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments