75 சதவீதம் கல்விக்கட்டணம் மட்டுமே பெற வேண்டும் ; தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவு
நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு 75 விழுக்காடு கல்விக் கட்டணம் மட்டுமே பெற வேண்டும் எனத் தனியார் சுயநிதிப் பள்ளிகளுக்குப் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இரண்டு தவணைகளாகக் கட்டணம் பெறலாம் என்றும், முதல் தவணை 40 விழுக்காடு தொகையை ஆகஸ்ட் 31ஆம் நாளுக்குள் பெறலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கியதில் இருந்து இரண்டு மாதக் காலத்துக்குள் இரண்டாம் தவணை 35 விழுக்காடு தொகையைப் பெறலாம் என்றும், எஞ்சிய 25 விழுக்காடு தொகையைப் பெறுவது குறித்துச் சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என்றும் பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
Comments