குழந்தையின் மருத்துவ செலவுக்கு ரூ. 16 கோடி தேவை ; மாவட்ட ஆட்சியரிடம் உதவி கேட்டு தம்பதியர் மனு
கோவையில் spinal muskular atropthy பாதித்த தங்கள் குழந்தையின் மருத்துவ செலவுக்கு தேவைப்படும் 16 கோடி ரூபாயை கொடுத்து உதவக்கோரி ஒரு தம்பதியர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.
கந்தே கவுண்டன் சாவடி பகுதியை சேர்ந்த தினேஷ் குமார் - ரோமிலா தம்பதியினரின் 6 மாத கைக்குழந்தைக்கு spinal muskular atropthy டைப் 1 எனப்படும் அரிய வகை நோய் பாதிப்பு உள்ளது. இதனால் குழந்தையின் முதுகெலும்பில் உள்ள நரம்புகள் சிதைவடைந்து கை கால்கள் அசைவில்லா நிலையிலும், சாப்பிட முடியாமலும் உள்ளது.
இந்த பாதிப்புள்ள குழந்தைகளுக்கு ஒன்று அல்லது 2 ஆண்டுகளில் zolgensma எனப்படும் மருந்து கொடுக்கப்பட வேண்டும் என கூறப்படும் நிலையில், அதற்கு தேவைப்படும் 16 கோடி ரூபாயை கொடுத்து குழந்தையை காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என தாய் கண்ணீருடன் தெரிவித்தார்.
Comments