மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர், ஹர்ஷ்வர்தன் ராஜினாமா

0 4436

43 பேர் புதிய மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ள சூழலில், மத்திய அமைச்சர்களாக இருந்த 12 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.

மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் பதவி விலகி உள்ளனர். இவர்கள் இருவரும் வாஜ்பாய் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மூத்த அமைச்சர்கள் ஆவர். பதவியை ராஜினாமா செய்தாலும், புதிய அமைச்சரவை பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அதே போன்று சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், இணை அமைச்சர் அஷ்வினி சவுபே ஆகியோரும் ராஜினாமா செய்தனர். கொரோனா 2வது அலையை எதிர்கொள்ள போதிய முன்னேற்பாடுகளை செய்யவில்லை என்று மத்திய அரசு மீது விமர்சனம் எழுந்தததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

கர்நாடகாவை சேர்ந்த ரசயாயனத்துறை அமைச்சர் சதானந்த கவுடா, கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆகியோரும் மேலிட உத்தரவின் பேரில் பதவி விலகினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments