பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 15 ரயில் நிலையங்களில் 340 சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் நிறைவு

0 2221
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 15 ரயில் நிலையங்களில் 340 சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் நிறைவு

யணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தென்மேற்கு ரயில்வேக்கு உட்பட்ட 15 ரயில் நிலையங்களில் 8 கோடி ரூபாய் மதிப்பில் 340 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் முடிந்து உள்ளன.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சிவமொக்கா, ஹாசன், தாவணகெரே, பங்காருபேட்டை, கெங்கேரி, பெங்களூரு கன்டோன்மெண்ட், சத்ய சாய் பிரசாந்தி நிலையம், உப்பள்ளி, வாஸ்கோ, ஒசப்பேட்டே, பெலகாவி, பல்லாரி ஆகிய ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் முடிந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதக், விஜயாப்புரா, மைசூரு ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments