அழுக்கான கடல் பகுதியில் சுற்றித்திரியும் அபூர்வ கடல்குதிரைகள்
கிரீஸ் நாட்டின் அழுக்கான கடல் பகுதியில் மிகவும் அரிதினும் அரிதான கடல் குதிரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள வடக்கு பட்ராஸ் வளைகுடாவில் உள்ள ஐடோலிகோ தடாகத்தில் நூற்றுக்கணக்கான கடல் குதிரைகள் சுற்றித்திரிவதை கடலடி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தெளிவான, தூய்மையான கடல் பகுதியில் மட்டும் காணப்படும் கடல் குதிரைகள் அழுக்கடைந்த பகுதியில் காணப்படுவது விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
இப்பகுதி சுத்தம் செய்யப்படாவிட்டால் கடல் குதிரை இனங்கள் அழிந்து போகும் அபாயத்தை எதிர்கொள்கின்றன என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
Comments