நிலா காயும் நேரம் சரணம்..! அவளோடு..அவளும் வரணும்..! சிக்கிய பெண் வேட ரோமியோ

0 6501
நிலா காயும் நேரம் சரணம்..! அவளோடு..அவளும் வரணும்..! சிக்கிய பெண் வேட ரோமியோ

பெண் வேடமிட்டு குடும்ப பெண்களை சிரிக்கவைத்து காதல் வலையில் வீழ்த்தும் மோசடி ரோமியோவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 10க்கும் மேற்பட்ட பெண்களிடம் பணம் நகையை பறித்த பெண் வேட காதல் கொள்ளையன்

பார்ப்பதற்கு பாண்டா போல உருண்டையாக இருக்கும் இவர் தான் லேடி கெட்டப் ரங்கசாமி..!

ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தை சேர்ந்த ரங்கசாமி வேலை தேடுவது போல ஐதராபாத்தில் உள்ள லாலகுடா பகுதிக்கு சென்றுள்ளான். அங்கு தங்கி வேலை தேடுவதற்கு பதிலாக அக்கம் பக்கத்தில் வசிக்கின்ற திருமணமான பெண்களை தனது காதல் வலையில் விழ வைத்து பணம் பறிக்கும் மோசடி வேலைகளை அரங்கேற்றியுள்ளான்.

சிரிக்க சிரிக்க பேசினால் பெண்கள் எளிதில் காதலில் விழுந்துவிடுவார்கள் என்ற எண்ணத்தில், அறிமுகமாகும் பெண்களிடம் எல்லாம் அப்பாவித்தனமாக கோமாளி போல பேசி அவர்களின் நட்பை பெற்று, அவர்களது வீடுகளுக்கு சென்று அவர்களது ஆடைகளை அணிந்து கொண்டு பெண் போல வேடமிட்டு அவர்களை சிரிக்க வைத்து மயக்கி உள்ளான்.

தனது காதல் வலையில் சிக்கும் பெண்களிடம் பாலியல் இச்சையை தீர்த்துக் கொண்டு நெருக்கமாக புகைபடம் எடுத்து வைத்து, அதனை வைத்து மிரட்டி பணம் பெறுவதையும் வாடிக்கையாக்கி உள்ளான்.

ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பது போல ஒரு பெண்ணிடம் எவ்வளவு பணம் பெறமுடியுமோ அந்த அளவிற்கு ஏமாற்றி பெற்றதும், அடுத்த பெண்களை தேடிச்சென்றுவிடுவது இவனது வாடிக்கை என்று கூறப்படுகின்றது.

லாலகுடாவில் இதேபோல் ஒரு பெண்ணை ஏமாற்றியதாக ரங்கசாமி மீது காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் ரங்கசாமி மீது வழக்கு பதிவு செய்து அவனை பிடித்து விசாரித்த போது அவன் மீதுள்ள வழக்குகள் வெளிச்சத்திற்கு வந்தது.

தனது மோசடி வேலைக்காக திருமணம் ஆன நன்றாக சம்பாதிக்கும் சில திருமணமான பெண்களிடம்  நண்பன் போல பேசி பழகி, கணவன் மனைவிக்கிடையே சண்டையை ஏற்படுத்தி கணவரிடம் இருந்து விவாகரத்து செய்ய வைத்து அந்த பெண்களிடம் பணம் பறித்த கொடுமையை எல்லாம்  நிகழ்த்தியுள்ளான் லேடி கெட்டப் ரங்கசாமி..!

10க்கும் மேற்பட்ட குடும்ப பெண்களின் வாழ்க்கையில் கும்மியடித்த ரங்கசாமி, ஐதராபாத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கோவாவுக்கு ஹனிமூன் டிரிப் சென்றபோது அங்கு வைத்து ஹைதராபாத் போலீசார் அவனை சுற்றிவளைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ரங்கசாமி மீது பெண்களை பாலியியல் பலாத்காரம், செயின் திருட்டு உள்ளிட்ட 12 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் ஒரு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைக்கு சென்று வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து குடும்ப பெண்களை குறிவைத்து காதல் கொள்ளையில் ஈடுபட்டு அவர்களது வாழ்க்கையை சீரழிக்கும் ரங்கசாமியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என, மகளிர் அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதே நேரத்தில் குடும்ப பெண்கள்,  இது போன்ற காதல் மோசடி ஆசாமிகளிடம் சிக்கினால் என்ன மாதியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments