ஜே.இ.இ. 3-ம் கட்ட நுழைவுத் தேர்வு: ஜூலை 20ந் தேதி முதல் 25ந் தேதி வரை நடத்த ஏற்பாடு

0 5428

கொரோனா அச்சுறுத்தலால் ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் படிப்பிற்கான ஜேஇஇ நுழைவுத்தேர்வுகள் வரும் 20 ம் தேதி முதல் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தேர்வுக்கான காலஅட்டவணையை தனது டுவிட்டர் பக்கத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், வெளியிட்டுள்ளார்‍. அதன்படி ‍ ஜேஇஇ 3-ம் கட்ட நுழைவுத்தேர்வானது வரும் 20ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பப்பதிவு நாளை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஜேஇஇ 4-ம்கட்ட நுழைவுத் தேர்வு வரும் 27 ம் தேதி முதல் ஆகஸ்ட் 2-ம் தேதி வரை நடைபெறும் என்றும் இதற்கான விண்ணப்பப் பதிவு வரும் 9-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி நிறைவு பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு மையங்களின் எண்ணிக்கை 660-ல் இருந்து 828 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தேர்வுகளுக்கு ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments