குஜராத்தில் வனப்பகுதியிலிருந்து வெளியேறி சாலைக்கு வந்த சிங்கக் கூட்டம்

0 3042

குஜராத் மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 சிங்கங்கள் சாலையில் சாவகாசமாக நடந்து சென்ற வீடியோ இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

ஆசிய சிங்கங்களின் ஒரே புகலிடமாக இருப்பது குஜராத்தின் கிர் வனப்பகுதி. இதனை ஒட்டியுள்ள அம்ரெலி மாவட்டத்தின் வனப்பகுதியில் இருந்து 3 பெண் சிங்கங்களும், 2 குட்டிகளும் வெளியேறின. பின்னர் அந்த சிங்கக்கூட்டம் பிபாபவ் சாலையில் சிங்கநடை போட்டு ஒய்யாரமாக நடந்து சென்றன.

இரவு நேரம் என்பதால் போக்குவரத்து ஏதுமில்லாததால் சிங்கங்களின் சிங்க நடை நீண்ட நேரம் நீடித்தது. இந்த வீடியோவை இணையத்தில் ஏராளமானோர் பார்த்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments