"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
கொரோனா பரவல் முடிவடையவில்லை - மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை
கொரோனா பரவல் முடிவடையவில்லை என்றும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கிட்டதட்ட இயல்புநிலை காணப்படும் நிலையில் மக்கள் இடைவெளி இல்லாமலும் முகக்கவசம் அணியாமலும் இருந்து வருகின்றனர்.
மலை சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் மக்கள் கூட்டமும் அதிகளவில் உள்ளதை சுட்டிக் காட்டிய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால், கோவிட் நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் மத்திய மாநில அரசுகளுக்கு துணை நிற்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா வழிகாட்டு நெறிகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Comments