ஐசிஎஃப் முன்னாள் தலைமை பொறியாளர் லஞ்ச புகாரில் கைது ; தங்கம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல்
சென்னை ஐசிஎஃப் பின் முன்னாள் தலைமை மெக்கானிக்கல் பொறியாளர் லஞ்சம் வாங்கி கைதான விவகாரத்தில், மேலும் 4 கோடியே 28 லட்சம் ரூபாய் வைப்புத் தொகையும், சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
சென்னை ஐசிஎப் பின் முன்னாள் தலைமை மெக்கானிக்கல் பொறியாளர் காத்பால், பணி ஓய்வுக்குப் பின் தவணை முறையில் லஞ்சம் வாங்க திட்டமிட்டு, 50 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் சிபிஐ கையும் களவுமாக கைது செய்தது.
இந்த லஞ்சப் பணத்தை பரிமாற்றம் செய்ய உதவிய பெண் தொழில் அதிபர் உள்ளிட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மற்றும் டெல்லி உட்பட ஒன்பது இடங்களில் சிபிஐ முதல் நாள் நடத்திய சோதனையில் 2 கோடியே 75 லட்சம் ரூபாய் பணமும் 23 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments