ஊழல் வழக்கில் கைதான விக்டர் பபரிக்கோவுக்கு 14 ஆண்டுகள் சிறை ; மேற்கத்திய நாடுகள் குற்றச்சாட்டு
பெலாரஸ் அதிபரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட இருந்த விக்டர் பபரிக்கோ-வுக்கு (Viktor Babariko) ஊழல் வழக்கில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1994 முதல் பெலாரஸ் அதிபாராக பதவி வகிக்கும் லூகாஷென்கோ (Lukashenko) இந்தாண்டு நடந்த அதிபர் தேர்தலிலும் பிரமாண்ட வெற்றி பெற்றார். தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக பெலாரஸ் முழுதும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.
இந்நிலையில், தேர்தலின் போது எதிர்கட்சிகளை ஓரணியில் திரட்டிய விக்டர் பபரிக்கோ- (Viktor Babariko) கடந்த ஜூன் மாதம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Comments