கேரளாவில் 6 மாவட்டங்களில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க பினராயி விஜயன் அரசு உத்தரவு

0 2532

கேரளாவில் 6 மாவட்டங்களில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க பினராயி விஜயன் அரசு உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் திருச்சூர், கோழிக்காடு, மலப்புரம், வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 6 மாவட்டங்களில் கொரோனா தொற்று விகிதம் அதிகமாகவே இருக்கிறது.

இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் 6 மாவட்ட ஆட்சியர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அவசர ஆலோசனை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து முகநூலில் அமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில், குறிப்பிட்ட 6 மாவட்டங்களிலும் கொரோனா பரிசோதனை, தனிமைப்படுத்தும் காலம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிவதை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments