பைசர் தடுப்பூசியின் செயல் திறன் குறித்து இஸ்ரேல் கருத்து
அமெரிக்காவை சேர்ந்த பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி, டெல்டா வகை கொரோனா தொற்றை தடுப்பதில் திறன் குறைந்து இருப்பதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பூளும்பர்கில் வெளியிடப்பட்ட செய்தியில், வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுப்பதில் பைசர் தடுப்பூசியின் செயல்திறன், 94 சதவீதத்தில் இருந்து 64 சதவீதமாக குறைந்திருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து, டெல்டா வகை கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஜூன் 6 ஆம் தேதி முதல் ஜூலை முதல் வாரத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. அதே சமயம், தீவிர உடல்நல பாதிப்பு மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதில் இருந்து பைசர் தடுப்பூசி 93 சதவீதம் பாதுகாப்பு அளிப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
Comments