டோக்கியோ ஒலிம்பிக்கில் 5 தமிழக வீரர்கள்..! இந்தியாவில் முதல்முறையாக ஒரே மாநிலத்தில் இருந்து 5 பேர் தேர்வு

0 4605

மிழகத்தை சேர்ந்த 5 தடகள வீரர் வீராங்கணைகள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ள 26 பேர் கொண்ட தடகள அணியை இந்திய தடகள சம்மேளனம் அறிவித்தது. அதில், தமிழகத்தை சேர்ந்த 3 வீராங்கணைகள் உள்ளிட்ட 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர் ஆகியோர் கலப்பு 4*400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் கலந்து கொள்ள தேர்வாகியுள்ளனர். ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகியோர் ஆண்களுக்கான 4* 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் முதல் முறையாக ஒரே மாநிலத்தில் இருந்து தடகள வீரர்கள் 5 பேர் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments