ஜப்பானில் தொடர் கனமழையால் ராட்சத நிலச்சரிவு ; இடிபாடுகளில் சிக்கியவர்களைத் தேடும் பணிகள் தீவிரம்

0 2426
ஜப்பானில் தொடர் கனமழையால் ராட்சத நிலச்சரிவு

ஜப்பானில், கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து 4 நாட்களாக நடந்து வருகின்றன. சுற்றுலாத்தலமான அடாமி-யில் (Atami) கடந்த வாரம் பெய்த கனமழையால் ஏற்பட்ட ராட்சத நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் அடித்து செல்லப்பட்டன.

நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்த நிலையில் காணாமல் போன 24 பேரை மீட்பு குழுவினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கியவர்களுக்கு காயம் ஏற்படக்கூடாது என்பதற்காக மீட்பு குழுவினர் எந்திரங்களுக்கு பதிலாக கைகளால் இடிபாடுகளை அகற்றி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments