ஃபோர்ஸ் மோட்டார்ஸ் வாகன விற்பனை இருமடங்கு அதிகரிப்பு
ஃபோர்ஸ் மோட்டார்ஸ் வாகன விற்பனை இரு மடங்காக உயர்ந்ததையடுத்து மும்பை பங்கு சந்தையில் அந்நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு அதிகரித்துள்ளது.
ட்ராவலர்ஸ், ஆம்புலன்ஸ், எஸ்யூவி மற்றும் இலகுரக வானங்களை தயாரித்துவரும் ஃபோர்ஸ் மோட்டர்சின் வாகன விற்பனை கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை காட்டிலும் இந்த ஆண்டு ஜூன் மாதம் இரு மடங்கு அதிகரித்துள்ளது. இதன் மூலம் அந்நிறுவனத்தின் பங்குகள் 18 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
ஃபோர்ஸ் மோட்டார்ஸின் மொத்த உள்நாட்டு விற்பனை கடந்த ஆண்டு இதே மாதத்தில் 726 யூனிட்டுகளாக இருந்த நிலையில் இந்த ஆண்டு 1,501 யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது.
அதேபோல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 134 யூனிட் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அந்த அளவு 424 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது.
Comments