விரைவில் அரசு இலவச தடுப்பூசி மையங்களில் ஸ்புட்னிக்-வி

0 4509
விரைவில் அரசு இலவச தடுப்பூசி மையங்களில் ஸ்புட்னிக்-வி

ஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி, விரைவில் அரசின் தடுப்பூசி மையங்களில் இலவசமாக போடப்படும் என மத்திய அரசின் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கை குழுவின் தலைவர் டாக்டர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளார்.

தற்போது ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை மைனஸ் 18 டிகிரியில் வைக்க வேண்டும் என்பதால், போலியோ தடுப்புமருந்துகளை வைக்கும் வசதிகளை பயன்படுத்தி அது  நாட்டின் கடைக்கோடி கிராமங்களுக்கும் கொண்டு செல்லப்படும் என அரோரா கூறினார்.

கோவிஷீல்டு, கோவேக்சின்  ஆகியவற்றோடு ஸ்புட்னிக்-வி, மாடர்னா மற்றும் ஸைடஸ் கெடிலா தடுப்பூசிகளும் வருவதால் தினசரி தடுப்பூசி டோசுகள் ஒரு கோடி வரை உயரும்  என அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments