கோபா அமெரிக்கா கால்பந்தாட்ட தொடர்: பெருவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பிரேசில்

0 4377

கோபா அமெரிக்கா கால்பந்தாட்ட தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் பெருவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பிரேசில் இறுதி போட்டிக்குள் நுழைந்தது.

பிரேசிலின் ரியோடி ஜெனிரோவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் கோபா அமெரிக்க கால்பந்தாட்ட தொடரின் அரையிறுதியில் பிரேசில்- பெரு அணிகள் பலப்பரீட்சை நடத்திய நிலையில், பெரு அணியின் கோல் கீப்பர் pedro gallese, பிரேசில் அணியின் 4 முயற்சிகளை தொடர்ந்து தடுத்து நிறுத்தினார்.

இருப்பினும் ஆட்டத்தின் முதல் பாதியின் 35-ஆவது நிமிடத்தில் பிரேசிலின் லூகாஸ் அடித்த கோல் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments