கருத்து சுதந்திரத்தை பறிக்கும் ஒளிப்பதிவு திருத்த மசோதா 2021ஐ திரும்ப பெற வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
மத்திய அரசின் ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இந்த சட்டத்திருத்தம் படைப்பாளிகளின் கருத்து சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக மாறிவிடும் என திரை பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்ததோடு,முதலமைச்சரை சந்தித்து மனு அளித்திருந்தனர்.
இந்த நிலையில், மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள ஒளிப்பதிவு சட்ட திருத்தங்கள், மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் மற்றும் மாநில அரசுகளின் அதிகாரங்களை குறைக்கும் வகையிலும், கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் வகையிலும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
Comments