முடிவுக்கு வருகிறது கொரோனா 2-வது அலை: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

0 6201

தமிழகத்தில் கொரோனா 2வது அலை முடிவுக்கு வரும் நிலையில் உள்ளதாக கூறியுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசி ஒதுக்குமாறு நாளை மறு நாள் டெல்லி சென்று வலியுறுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார். 

சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தற்போது 63ஆயிரத்து460 டோஸ் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளது என்றார். கடந்த ஆட்சியில் 4லட்சம் டோஸ் தடுப்பூசி வீணடிக்கப்பட்டதாக குற்றம்சாட்டிய அமைச்சர், தற்போது தடுப்பூசியை மிக கவனமாக கையாள்வதாகவும், அதன் பலனாக கூடுதலாக ஒன்றரை லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிகளை ஒதுக்குமாறு நாளை மறு நாள் டெல்லி சென்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனிடம் வலியுறுத்தவுள்ளதாக கூறிய அமைச்சர், கொரோனாவுக்கு பிந்தைய நலவாழ்வு மையம் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்படும் என்றார். கொரோனா 2-ஆவது அலை முடிவுக்கு வரும் நிலையில் இருப்பதாகவும், 3-வது அலை வந்தாலும் அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

திருவாரூரில் சுமார் 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments