மீனவர்கள் விரட்டியடிப்பு - இலங்கை கடற்படை மீது ராமேஸ்வரம் மீனவர்கள் புகார்
நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததாக புகார் எழுந்துள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். பாரம்பரிய மீன்பிடி பகுதியான தனுஷ்கோடிக்கும் கச்சத்தீவுக்கும் இடையே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, 8-க்கும் மேற்பட்ட அதிநவீன ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் தங்களுக்கு சொந்தமான பகுதிகளில் மீன்பிடிக்கக் கூடாது எனக் கூறி ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து மீனவர்களை விரட்டியடித்ததாக கூறப்படுகிறது.
ஒரு படகு கடலுக்கு சென்று வர டீசல் செலவு உட்பட ஆயிரக்கணக்கில் செலவாகும் என்பதால் பல லட்சம் ரூபாய் நஷ்டத்துடன் மீன்பிடிக்க முடியாமல் மீனவர்கள் ஏமாற்றத்துடன் கரை திரும்பினர்
Comments