ஒகேனக்கல்லில் நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை... சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

0 4164

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் நீர் வீழ்ச்சியில் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படாததால்  அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

நேற்று முன்தினம் அரசால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வில் கோயில்கள், சுற்றுலா தலங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டது. இதனால் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டத்திலிருந்து  ஏராளமான  சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வரத் துவங்கினர்.

ஆனால் ஒகேனக்கல் நீர் வீழ்ச்சியில்  வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் வரும் சுற்றுலா பயணிகள் ஒரே இடத்தில் குளித்தால் தொற்று பரவ வாய்ப்புள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வருவதற்கான தடையை மாவட்ட நிர்வாகம் நீக்கவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments