மண்ணிற்கு பதிலாக நீரில் செய்யப்படும் "ஹைட்ரோபோனிக்" விவசாயம் ; அதிக மகசூல் ஈட்டி இளைஞர் அசத்தல்

0 8754
நீரில் செய்யப்படும் "ஹைட்ரோபோனிக்" விவசாயம்

எகிப்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மண்ணிற்கு மாற்றாக ஊட்டச்சத்துகள் கலந்த நீரில் செய்யப்படும் ஹைட்ரோபோனிக் விவசாயம் மூலம் குறைந்தளவு நீரை பயன்படுத்தி அதிக மகசூலை ஈட்டியுள்ளார்.

32 வயதாகும் அப்டெல்ரஹ்மான் (Abdelrahman)தனக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் ஹைட்ரோபோனிக் விவசாயம் மற்றும் ஜிலேபி மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார். தண்ணீரில் வளரும் காய்கறிச் செடிகளுக்கு உரமாக மீன் தொட்டிகளில் சேரும் கழிவுகள் பயன்படுத்தப்படுகிறது.

வழக்கமாக அதிகளவு நீரை பயன்படுத்தி, 8 ஏக்கர் நிலத்தில் கிடைக்கும் மகசூல் ஹைட்ரோபோனிக் விவசாயம் மூலம் ஒரு ஏக்கரில் கிடைப்பதாகத் தெரிவிக்கும் அப்டெல்ரஹ்மான் இதன் மூலம் 95 சதவீத நீர் தேவை மிச்சப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments