பாஜக, சிவசேனா உறவு அமீர்கான்-கிரண் ராவ் உறவை போன்றது - சஞ்சய் ராவத்
சிவசேனாவுக்கும் பாஜகவுக்கும் இடையேயான உறவு, பாலிவுட் ஸ்டார் அமீர்கானுக்கும் அவரது மனைவி கிரண் ராவுக்கும் இடையேயான உறவைப் போன்றது என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
இந்த இருவரும் விவாகரத்து செய்ய முடிவெடுத்தாலும் நல்ல நண்பர்களாக தொடர்வோம் என அண்மையில் தெரிவித்தனர். இந்த நிலையில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த சஞ்சய் ராவத், முன்னாள் கூட்டணி கட்சிகளான பாஜகவும், சிவசேனாவும் இந்தியா-பாகிஸ்தான் போன்றவை அல்ல என்றார். அரசியல் பாதை வேறாக இருந்தாலும் நண்பர்களாக சேர்ந்திருக்கிறோம் என அவர் கூறினார்.
Comments