பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, சைக்கிள் ஓட்டிச் சென்று எதிர்ப்பை தெரிவித்தார் பிரேமலதா விஜயகாந்த்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, தேமுதிக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சைக்கிள் ஓட்டிச் சென்று எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
சென்னை மண்ணடியிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரியும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் தேமுதிக சார்பில் போராட்டம் நடைபெற்றது.
Comments