மறைந்த அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் பிறந்த தினம் : நெருங்கிய நண்பரை இழந்து வாடுவதாக பிரதமர் மோடி புகழஞ்சலி
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் பிறந்த தினத்தில் அவரை நினைவு கூர்ந்துள்ள பிரதமர் மோடி, அவரது அருகாமையை பெருமளவில் இழந்து வாடுவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்த டுவிட் பதிவில், ராம் விலாஸ் பாஸ்வான், இந்தியாவின் அனுபவம் வாய்ந்த எம்பிக்களிலும், அமைச்சர்களிலும் ஒருவர் என மோடி குறிப்பிட்டுள்ளார். மக்கள் சேவையிலும், நலிவடைந்த மக்களை முன்னேற்றுவதிலும் ராம் விலாஸ் பாஸ்வானின் பங்களிப்பு என்றென்றும் நினைவுகூறப்படும் என மோடி தெரிவித்துள்ளார்.
Today is the birth anniversary of my friend, late Ram Vilas Paswan Ji. I miss his presence greatly. He was one of India’s most experienced Parliamentarians and administrators. His contributions to public service and empowering the downtrodden will always be remembered.
Comments