ஆஸ்திரியன் கிராண்ட்பிரி கார்பந்தயப் போட்டி: பெல்ஜியம் வீரர் மாக்ஸ் வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம்

0 3888

ஆஸ்திரியன் கிராண்ட்பிரி கார்பந்தயத்தில் பெல்ஜியம் வீரர் மாக்ஸ் வெர்ஸ்ட்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்றார்.ஸ்பீல்பெர்கில் நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் முன்னணி வீரர்கள் பலரும் பங்கேற்றனர்.

306 கிலோ மீட்டர் இலக்கை ஒரு மணி 23 நிமிடம் 54 வினாடிகளில் கடந்து ரெட்புல் அணியின் வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். உலக சாம்பியனான ஹாமில்டன் பின்தங்கியதால் 4வது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது.

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பல மாதங்களுக்குப் பின் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டதால், அரங்கம் நிரம்பி வழிந்தது. கரவொலி எழுப்பியும், கொடிகளை அசைத்தும் வீரர்களை அவர்கள் உற்சாகப்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments