மாடுகளின் பெயரால் மனிதர்களைக் கொல்பவர்கள் இந்துத்துவாவுக்கு எதிரானவர்கள்: ஆர்எஸ்எஸ் தலைவர்
மாடுகளின் பெயரால் மனிதர்களைக் கொல்பவர்கள் இந்துத்துவாவிற்கு எதிரானவர்கள் என ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் காஸியாபாத்தில் முஸ்லீம் ராஷ்ட்ரீய மஞ்ச் அமைப்பினர் நடத்திய கூட்டத்தில் பேசிய அவர், இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறுபவர்கள் இந்துக்களே அல்ல என்று குறிப்பிட்டார்.
அனைத்து இந்தியர்களுக்கும் டிஎன்ஏ ஒன்றுதான் என்று பேசிய மோகன் பகவத், இந்தியா போன்ற ஒரு ஜனநாயகத்தில், இந்துக்கள் அல்லது முஸ்லிம்களைக் காட்டிலும் இந்தியர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.
Comments