சென்னை எஸ்.பி.ஐ ஏடிஎம் கொள்ளை சம்பவம் ; 3வது கொள்ளையன் நஜீம் உசைனிடம் போலீசார் தீவிர விசாரணை

0 3013
சென்னை எஸ்.பி.ஐ ஏடிஎம் கொள்ளை சம்பவம்;3வது கொள்ளையனிடம் போலீசார் தீவிர விசாரணை

சென்னை எஸ்.பி.ஐ ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் கைதானவர்களில் ஒருவனான நஜீம் உசைன், கொள்ளை கும்பலின் தலைவனை தப்பிக்க வைக்க சொந்தமாகக் கார் வாங்கி வந்து அழைத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தக் கொள்ளை சம்பவத்தில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 3வது கொள்ளையன் நஜீம் உசைனை 4 நாள் காவலில் எடுத்து பீர்க்கங்கரணை போலீசார் விசாரித்து வருகின்றனர். சாலையோரங்களில் துணி வியாபாரம் செய்து கொண்டே, சிறு சிறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகவும், அமீரின் மூலமாக சவுகத் அலிக்கு பழக்கமானதாகவும் நஜீம் உசைன் போலீசில் தெரிவித்துள்ளான்.

பல்லாவரம், பீர்க்கன்கரணை, மற்றும் வேலூர், பெங்களூர் போன்ற பகுதிகளில் டெபாசிட் எந்திரத்திக் கொள்ளையடித்து விட்டு அந்த ஏடிஎம் கார்டுகளை உடைத்து போட்டு சென்றதாகவும் போலீசில் அவன் தெரிவித்துள்ளான்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments