கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுஷில் குமார் ; திஹார் சிறையில் பொழுதை போக்க தொலைக்காட்சி வேண்டி கடிதம்

0 5383
சிறைச்சாலையில் தொலைக்காட்சி கேட்கும் மல்யுத்த வீரர் சுஷில் குமார்

கொலை வழக்கில் கைதாகி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மல்யுத்த வீரர் சுஷில் குமார் தொலைக்காட்சி வேண்டி சிறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமார், தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து சாகர் தன்கர்  என்ற மல்யுத்த வீரரை ஹாக்கி ஸ்டிக்குகளால் அடித்து கொலை செய்தார்.

தலைமறைவான சுஷில் குமாரை போலீசார் கைது செய்து திஹார் சிறையில் அடைத்தனர். இதையடுத்து, சிறைச்சாலையில் பொழுதை போக்குவதற்காக தொலைக்காட்சி வேண்டி சிறை நிர்வாகத்திடம் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

இதற்கு முன்னர், தனது கட்டுடலை பராமரிக்க சிறைச்சாலையில் சிறப்பு உணவு வகைகளை வழங்குமாறு அவர் வைத்த கோரிக்கையை டெல்லி நீதிமன்றம் நிராகரித்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments