செல்போன் சிக்னல் கிடைக்காமல் ஆலமரத்தின் மீது ஏறி அமர்ந்து ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்கள்

0 3562
செல்போன் சிக்னல் கிடைக்காமல் ஆலமரத்தின் மீது ஏறி அமர்ந்து ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்கள்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே செல்போன் சிக்னல் கிடைக்காததால், ஆலமரத்தின் மீது ஏறி அமர்ந்து கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வருகின்றனர்.

பெரபஞ்சோலை மற்றும் பெரியகோம்பை கிராமங்களில் செல்போன் டவர்கள் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் சிக்னல் கிடைக்காமல் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடும் அவதியுற்று வருவதாகக் கூறுகின்றனர்.

செல்போன் சிக்னலுக்காக அங்குள்ள பெரிய பெரிய ஆலமரங்களின் மீது ஆபத்தை உணராமல் ஏறி அமர்ந்து அவர்கள் வகுப்பில் பங்கேற்று வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் தங்கள் பகுதியில் தேவையான செல்போன் டவர்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments