பிலிப்பைன்ஸ் விமான விபத்து : 17 பேர் உயிரிழப்பு , 40 பேர் மருத்துவமனைகளில் அனுமதி

0 3351
பிலிப்பைன்ஸ் விமான விபத்து : 17 பேர் உயிரிழப்பு , 40 பேர் மருத்துவமனைகளில் அனுமதி

பிலிப்பைன்சில், ராணுவ விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததில், 17 பேர் உயிரிழந்ததாக , அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த 40 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மணிலாவுக்கு தெற்கே 1000 கிலோமீட்டர் தொலைவில், ஜோலோ தீவு என்ற இடத்தில் இந்த சி-130 ரக விமானம் தரையிறங்க முயன்றது.

அப்போது விமானம் ஓடுதளத்தை விட்டு விலகி சென்றதாகவும், விமானத்தை மீண்டும் உயர்த்தும் விமானியின் முயற்சி பலனளிக்காமல் அது விழுந்து நொறுங்கியதாகவும் கூறப்படுகிறது.

விபத்தை தொடர்ந்து அங்கு விரைந்த மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர்கள் வாயிலாக காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

விமானத்தில் மொத்தம் 92 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே உயிரிப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments