டுவிட்டர் இந்தியா எம்.டி. மணீஷ் மகேஸ்வரி மீது மத வெறுப்பை தூண்டியதாக மேலும் ஒரு வழக்கு

0 2961
டுவிட்டர் இந்தியா எம்.டி. மணீஷ் மகேஸ்வரி மீது மத வெறுப்பை தூண்டியதாக மேலும் ஒரு வழக்கு

ற்கனவே இரண்டு வழக்குகளில் சிக்கி உள்ள டுவிட்டர் இந்தியா எம்.டி. மணீஷ் மகேஸ்வரி மீது ,மத வெறுப்பை தூண்டியதாக  மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மணீஷ் மகேஸ்வரி உள்ளிட்ட டுவிட்டர் நிர்வாகிகள் மீது ஆதித்ய சிங் தேஷ்வால் என்ற வழக்கறிஞர் டெல்லி போலீஸ் சைபர் செல்லில் இது தொடர்பான புகாரை அளித்துள்ளார்.

Atheist Republic  என்ற அமைப்பின்  டுவிட்டர் கணக்கில் இந்து கடவுளான காளியை அவமதித்துள்ளதாகவும், சமூகத்தில் மதவெறுப்பை தூண்டும் வகையில் அது பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் புகாரில் குற்றஞ்சாட்டப்பட்டுளது.

உ.பி. மாநிலம் காசியாபாத்தில் இஸ்லாமியர் ஒருவர் தாக்கப்படுவதாக வெளியான வீடியோ பதிவு, டுவிட்டர் இணையதளத்தில் தவறான இந்திய வரைபடத்தை வெளியிட்டது ஆகியன தொடர்பாக மணீஷ் மகேஸ்வரி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments