1.5 டன் ஆவின் இனிப்புகளை இலவசமாக வீட்டுக்கு எடுத்துச் சென்றதாக ராஜேந்திர பாலாஜி மீது பால்வளத்துறை அமைச்சர் நாசர் குற்றச்சாட்டு
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த ஆண்டு தீபாவளியின்போது இலவசமாக வழங்க ஆவினில் இருந்து தனது வீட்டுக்கு ஒன்றரை டன் இனிப்புகளை எடுத்துச் சென்றதற்கான ஆதாரம் இருக்கிறது என்றும் விசாரணைக்குப் பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார்.
இன்று அதிகாலையிலேயே மாவட்ட ஆட்சியருடன் சேலம் பால்பண்ணைக்குச் சென்ற பால்வளத்துறை அமைச்சர் நாசர், பால் உற்பத்தி மற்றும் விற்பனையை கூட்டுவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஆட்சியில் ஆவின் நிர்வாகத்தில் முறைகேடாக நடைபெற்ற பணி நியமனங்கள் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார்.
Comments