காசிமேடு மீன்சந்தையில் காற்றில் பறந்த தனிமனித இடைவெளி..! பட்டினப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட்டுகளிலும் அலைமோதிய கூட்டம்

0 2987

வார விடுமுறையையொட்டி, சென்னையில் உள்ள மீன் சந்தைகளில் மீன் வாங்க அதிகாலை முதலே மக்கள் அதிகளவில் கூடினர்.

பட்டினப்பாக்கம் மீன் சந்தையில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அதில், பெரும்பாலான வியாபாரிகளும், பொதுமக்களும் முகக்கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியின்றியும் மீன்களை வாங்கி சென்றனர்.

நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தியும் மக்கள் அலட்சியமாக செயல்பட்டனர்.

அதேபோல், சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் சமூக இடைவெளி இல்லாமல் கூட்டம் கூட்டமாக நின்று பொதுமக்கள் மீன் வாங்கி சென்றனர்.

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் ஏராளமான மீன் பிரியர்கள் குவிந்ததால் மீன்சந்தையானது திருவிழா போல காட்சியளித்தது. மீன்வரத்து குறைவால் மீன்களின் விலை இரு மடங்கு அதிகரித்துள்ளது.

வழக்கமாக கிலோ 600 ரூபாய்க்கு விற்கப்படும் வஞ்சிரம் மீன் 1300 ரூபாய்க்கும், ஷீலா மீன் வகைகள் 300 ரூபாயிலிருந்து 700 ரூபாய்க்கும், சங்கரா மீன் 250 லிருந்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் இறால், நண்டு விலையும் இரு மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments