ஒரே தோப்பில் விளையும் 50 வகையான மாம்பழங்கள்;விவசாய சகோதரர்களின் புதிய முயற்சி
மத்திய பிரதேசத்தின் Dhar நகரில் ஒரு விவசாய சகோதரர்கள் ஒரே தோட்டத்தில் 50 வகையான மா மரங்களை வளர்த்து வருகின்றனர். Rajpura கிராமத்தில் வசித்து வரும் Rameshwar மற்றும் Jagdish ஆகிய சகோதரர்கள் அங்கு மிகப்பெரிய மாந்தோப்பு ஒன்றை வைத்துள்ளனர்.
அதில் ஆப்கானிஸ்தானின் Amrapuri முதல் மெக்சிகோவின் Sensation மாம்பழங்கள் வரை பலதரப்பட்ட 50 வகையான மா மரங்களை ஒரே தோட்டத்தில் வளர்த்து வருகின்றனர்.
இதற்காக இந்தியா முழுவதும் பயணித்து பல்வேறு வகையான மா கன்றுகளை வாங்கி வளர்த்து வரும் இவர்கள், மொத்தம் 978 மா மரங்களை வளர்த்து வருகின்றனர்.
Comments